லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர் தகவல் தொடர்புக்காக பேஜர் கருவிகளை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் செப்.17 அன்று பலர் கையில் வைத்திருந்த பேஜர் கருவிகள் வெடித்து சிதறின. இதில் 12 பேர் பலியாகி இருப்பதாகவும் 2,800 பேர் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே போல் செப்.18 அன்று வாக்கி டாக்கி கருவிகள் வெடித்தன. இதில் ஒரே நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.