லெபனான் நாட்டில் பேஜர் கருவிகளைத் தொடர்ந்து, வாக்கி டாக்கி கருவிகளும் வெடித்து சிதறியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிரான ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு தொலைத் தொடர்புக்காக இந்த இரண்டு கருவிகளை பயன்படுத்தி வந்தனர். இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாட், ஹிஸ்புல்லா குழுவினரின் தொலைத்தொடர்பு கருவிகளை குறித்து சைபர் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் மூலம் ஹில்புல்லா அமைப்பைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.