விஜய் அரசியலுக்கு வரக் காரணமே ரெட் ஜெயண்ட் தான்!

70பார்த்தது
விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றால் அதற்கு காரணமே திமுகவின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். சிவகங்கை திருப்பத்தூரில் நேற்று (செப்., 19) பேசிய அவர், சினிமா துறையே ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்துள்ளவர் உதயநிதி ஸ்டாலின். இன்றைக்கு விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றால் அதற்கு காரணமே திமுகவின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான். மதுபான ஆலையை நடத்தக் கூடியவர்களே திமுகவினர் தான் என்றார்

தொடர்புடைய செய்தி