சோதனை சாவடியில் கட்டு கட்டாக பணம்: போலீசார் விசாரணை

68பார்த்தது
ஹைதராபாத்தில் இருந்து ராஜஸ்தானி சேர்ந்த பக்தாராம் என்பவர் பணம் இருந்தா அட்டைப்பெட்டியை பேருந்தில் ஏற்றி அனுப்பியதாகவும், அட்டைப்பெட்டியில் உள்ள நபரிடம் சென்னை மாதவாரத்தில் சேர்க்கும் படியும் ஆம்னி பேருந்து ஓட்டுனர் இடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஓட்டுனரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அட்டைப்பெட்டியில் இருந்த நபரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசி, பேருந்து பழுது காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து மாற்றுப் பேருந்தில் பொருட்கள் ஏற்றப்பட உள்ளதாகவும், உடனே பேருந்தில் உள்ள அட்டைப்பெட்டியை கும்மிடிப்பூண்டி வந்து வாங்கி கொள்ளுமாறும் தெரிவித்ததன் பேரில் கும்மிடிப்பூண்டி விரைந்து வந்த சூரஜ் பூரி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து சூரஜ் பூரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையில் வீட்டுமனை வாங்குவதற்காக பணம் கொண்டுவரப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டுவரப்பட்டதால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் பணத்தை ஒப்படைத்தனர். இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி