நடிகை ஷர்மிளா மீது மோசடி மற்றும் பாஸ்போர்ட் சட்ட அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேபாள நாட்டைச் சேர்ந்த ஷர்மிளா, நடன உதவி இயக்குநரை திருமணம் செய்து சென்னையில் வசித்து வருகிறார். இவர் மோசடி செய்து பாஸ்போர்ட் பெற்றதாக வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷர்மிளா தமிழில் விஸ்வாசம், வேதாளம் படத்தில் நடித்துள்ளார்.