ஸ்கூட்டர் திருடியவர் கைது

82பார்த்தது
ஸ்கூட்டர் திருடியவர் கைது
ஆவடி அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 58. இவர் 20ம் தேதி மாலை, திருநின்றவூர் வசந்தம் நகரில் நடக்கும், வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்கு நிறுத்தி வைத்திருந்த, அவரது 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் திருடு போனது. திருநின்றவூர் போலீசார் விசாரித்தனர்.

இதில், திருநின்றவூர், நாச்சியார் சத்திரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பழைய குற்றவாளி சத்யா, 21, என்பவர் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி