ஆம்புலன்ஸை இயக்கிய சிறுவன் - 2 பெண்கள் படுகாயம் (வீடியோ)

78பார்த்தது
கடலூர் அரசு மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்சை இயக்கிய சிறுவன், 2 பெண்கள் மீது மோதிய சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை இறக்கி உள்ளே அழைத்துச் சென்ற நேரத்தில், அங்கிருந்த சிறுவன் வாகனத்தில் ஏறி இயக்கியுள்ளார்.‌ அங்கு நடந்து சென்ற பெண்கள் மீது வாகனத்தால் மோதியுள்ளார். காயமடைந்த 2 பெண்களையும் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.