மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 13) தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நமது திராவிட அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆய்வுக்கூட்டங்களையும் கருத்துக்கேட்புக் கூட்டங்களையும் முறையாக நடத்தி அனைத்துத் தரப்பினரது கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறோம். சிறுபான்மைச் சகோதரர்கள் தங்களது கோரிக்கைகள் தற்போது செயலாக்கம் பெற்று வருவதற்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.