ஆபாச வீடியோ விவகாரம்: ரேவண்ணாவுக்கு தேவகவுடா கடும் எச்சரிக்கை

53பார்த்தது
ஆபாச வீடியோ விவகாரம்: ரேவண்ணாவுக்கு தேவகவுடா கடும் எச்சரிக்கை
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார். இது குறித்து தேவகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது பொறுமைக்கும் எல்லை உண்டு, ரேவண்ணா சட்ட ரீதியாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். அவர் மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டி தீர்க்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.