அடுத்த ஆண்டு வெளியாகிறது கிரண் பேடியின் பயோ பிக்

71பார்த்தது
அடுத்த ஆண்டு வெளியாகிறது கிரண் பேடியின் பயோ பிக்
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடியின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக வெளியாகவுள்ளது. இதற்கு 'பேடி: தி நேம் யூ நோ, தி ஸ்டோரி யூ டோன்ட்' (Bedi:The Name You Know, The Story You Don’t) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குஷால் சாவ்லா இயக்கியுள்ள இந்த படத்தை கௌரவ் சாவ்லா தயாரித்துள்ளார். படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது. இதுகுறித்து கிரண் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தியாவில் வளர்ந்து, படித்து, நாட்டு மக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு பெண்ணின் கதையை இந்த படம் பிரதிபலிக்கும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி