‘இளையராஜா பாடல்களுக்கு உரிமை கோர முடியாது’

55பார்த்தது
‘இளையராஜா பாடல்களுக்கு உரிமை கோர முடியாது’
இளையராஜா தனது பாடல்களுக்கு உரிமை கேட்டு வருவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. இதுகுறித்த விசாரணை இன்று (ஜூன் 13) நடைபெற்ற நிலையில், இளையராஜா, தனது பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என எக்கோ நிறுவனம் தனது வாதத்தினை முன்வைத்தது. அதில், “பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாத அவர், பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது. சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார்” எனவும் வாதிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி