உரிய நேரத்தில் ரேஷன் கடை திறக்காவிட்டால் நடவடிக்கை

65பார்த்தது
உரிய நேரத்தில் ரேஷன் கடை திறக்காவிட்டால் நடவடிக்கை
வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை எச்சரித்துள்ளது. ரேஷன் கடைகளை முறையாக திறக்க ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் எனவும் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மதியம் 2 முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி