“தூர்வாரும் மண்ணை மக்கள் எடுத்துக்கொள்ளலாம்”

65பார்த்தது
“தூர்வாரும் மண்ணை மக்கள் எடுத்துக்கொள்ளலாம்”
தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை கட்டணமின்றி பொதுமக்கள் பயன்படுத்தலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நீர்நிலைகளைத் தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை வேளாண் பயன்பாட்டிற்கு, பானைத் தொழில் செய்வதற்கு, நீங்கள் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்தவொரு நீர்நிலையில் இருந்தும் எடுத்துக்கொள்ளலாம். இதற்கான அனுமதியை வட்டாட்சியர்களிடம் இருந்து இணைய வழியாகக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். மழை நீரைச் சேமிக்கவும் மக்கள் பயன்பெறவும் இந்தத் திட்டம் துணைபுரியும்” என குறிப்பிட்டுள்ளார்.