புதுச்சேரியில் ஐபிஎல் டிக்கெட் மோசடியால், ரூ.2 லட்சத்திற்கு மேல் ரசிகர்கள் பணத்தை இழந்துள்ளனர். போலியான லிங்க்-ஐ யாரும் தொட வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. ஐபிஎல் 18வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் வருகிற 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி முடிகிறது. 65 நாட்களில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடக்கிறது.