சென்னை வடபழனியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வேளாண் பட்ஜெட்டை அண்ணாமலை விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுபோல், எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை. அண்ணாமலைக்கு பதில் சொல்லி, என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உண்மையான விவசாய மக்கள் வேளாண் பட்ஜெட்டை வரவேற்றுள்ளனர்” என்றார்.