ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யான் வெளியிட்ட பதிவில், “நான் இந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், அதை கட்டாயமாக்குவதற்காக முன்பு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தேன். தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020) இந்தியை எந்த வகையிலும் கட்டாயமாக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.