பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. அண்மையில் கைதான அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் தண்ணீர் பாய்ச்சும் விவகாரத்தில் குணா தன்னை மிரட்டுவதாக மோகன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், குணாவை கைது செய்த சுங்குவார்சத்திரம் போலீசார், அவரை வேலூர் சிறையில் 10 நாட்களுக்கு முன்னர் அடைத்தனர்.