மத்திய அரசின் பல்வேறு அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களின் URL இந்தி மொழியிலும், mygov.in தளத்தின் URL பிராந்திய மொழிகளிலும் மாற்றப்பட்டுள்ள நிலையில் அதன் தமிழ் பக்கத்தின் URL இந்தி மொழியில் இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம் தவிர்த்து mygov.in தளத்தின் பிற பிராந்திய மொழிகளின் URL-கள் அந்தந்தந்த மொழிகளில் மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த 3 மொழிகளில் URL மட்டும் இந்தியில் உள்ளது.