ரூ.1.20 கோடிக்கு மஞ்சள் ஏலம்

77பார்த்தது
ரூ.1.20 கோடிக்கு மஞ்சள் ஏலம்
நாமக்கல் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. விரளி ரக மஞ்சள் ரூ.11,990 முதல் ரூ.16,859 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.10,612 முதல் ரூ.11,989 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ.23,786 முதல் ரூ. 25,300 வரையிலும் விலை போனது. மொத்தம் 1,700 மூட்டைகள் தொகை ரூ.1.20 கோடிக்கு விற்பனை ஆனது. அதே போல், தேங்காய் பருப்பு (கொப்பரை) முதல் தரம் ரூ.133 முதல் ரூ.158.10 வரையில் விற்பனை ஆனது.

தொடர்புடைய செய்தி