
நெல்லை: மழையின் காரணமாக கூட்டம் ரத்து
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு 39வது வார்டு டிவிஎஸ் நகரில் இன்று (மார்ச் 11) மாலை நடைபெற இருந்த சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் இன்று அறிவித்துள்ளார்.