பேட்டை செக்கடி அருகே உள்ள விலைமதிப்புள்ளொரு இடத்தை உரிமை கோருவதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வரும் நிலையில் ஒரு தரப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் 10 வழக்கறிகளுடன் சேர்ந்து அந்த இடத்தில் சட்ட அலுவலகம் என்ற பெயர் பலகையை இன்று காலை மாட்டி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.