மதுரை மற்றும் திருச்சி மாவட்டத்தில் டைடல் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் அண்மையில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து விரைவில் டைடல் பூங்காவுக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.