கேரளம்: ஷாரோன் ராஜ் (25) என்பவரும், கிரீஷ்மா (22) என்ற மாணவியும் காதலித்த நிலையில் கடந்த 2022-ல் கிரீஷ்மா, ராஜுக்கு குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்றார். இதற்கு அவரின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல் குமார் உடந்தையாக இருந்த நிலையில் மூவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கிரீஷ்மா, நிர்மல் குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று (ஜன. 17) அறிவித்த நிலையில் தண்டனை விவரங்கள் இன்று (ஜன. 18) வெளியாகும்.