நெல்லை பாஜக தலைவர் கட்சியில் இருந்து விலகல்

57பார்த்தது
நெல்லை பாஜக தலைவர் கட்சியில் இருந்து விலகல்
நெல்லை பாஜக தலைவராக பல ஆண்டுகளாக இருந்து வந்த தயா சங்கர் கட்சியில் இருந்து விலகியுள்ளார். பாஜகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் இவர் எடுத்துள்ள முடிவு கவனம் பெற்றுள்ளது. நயினார் நாகேந்திரனின் ஆதரவாளராக வலம் வந்த தயா சங்கர், "இத்துடன் பாஜகவில் எனது அரசியல் பயணம் நிறைவடைகிறது, என்னுடன் பயணித்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி