திருவள்ளுவரை சனாதனக் கூண்டில் அடைத்து, காவி உடை அணிவிக்கும் ஆளுநர், முதலில் காவி உடை அணிய வேண்டும் என்று திமுக நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது. அரசியல் சட்டப்படி பதவி ஏற்றுக் கொண்ட ஆளுநர், சட்டம் மற்றும் அரசாணைகளை மீறி, தன் விருப்பத்திற்கு வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசிக் கொண்டு இருப்பதாக முரசொலி குற்றம்சாட்டியுள்ளது. ஆளுநரை ஐநாவிற்கு அழைத்து செல்லலாம் என்றும், அங்கும் ஆங்கில உடை, ஆங்கில மொழியை விடுத்து, காவி உடையில் சென்று முன்மாதிரியாக நடந்துகாட்ட வேண்டும் என்று சாடியுள்ளது.