மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணி தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என ஆர்டிஐ மூலம் கடந்த மாதம் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2019ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பல ஆண்டுகளாக கட்டுமான பணிகள் தொடங்காமல் இருந்த நிலையில் கடந்தாண்டே டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.