ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி ஜனவரி 26ல் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பே போராட்ட அறிவிப்பு வெளியான நிலையில், அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால், விடுமுறை நாளான ஜனவரி 26ல் போராட்டம் நடைபெறும், அன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிடில், ஜனவரி 27இல் கடையடைப்பு நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.