பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இந்தாண்டு ரொக்கம் வழங்கப்படாத நிலையில் ஒருகிலோ பச்சரிசி; ஒரு கிலோ சர்க்கரை; ஒரு முழு கரும்பு ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. 2.21 கோடி ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு பரிசு அறிவித்த நிலையில் இதுவரை 1.87 கோடி பேர் தொகுப்பை வாங்கியுள்ளனர், 33 லட்சம் பேர் வாங்கவில்லை.