ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளம், அவரது மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அல்-காதிர் அறக்கட்டளை மூலமாக இருவரும் சுமார் 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. பரிசு பொருட்களை விற்றது, அரசு ரகசியங்களை கசியவிட்டது என இம்ரான் கான் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், அவர் கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.