எருதாட்டத்தில் கூட்டத்திற்குள் மாடு புகுந்து 8 பேர் காயம்

53பார்த்தது
எருதாட்டத்தில் கூட்டத்திற்குள் மாடு புகுந்து 8 பேர் காயம்
சேலம்: ஓமலூர் அருகே ரெட்டிப்பட்டி பொடரியம்மன் கோயில் வளாகத்தில் ஆண்டுதோறும் எருதாட்டம் நடைபெறும். பொங்கலையொட்டி எருதாட்டம் நேற்று (ஜன., 17) நடந்தது.  100-க்கும் மேற்பட்ட எருதுகளை கோயில் வளாகத்தில் கொண்டு வந்து கயிறுகட்டி உறிகாட்டினர். எருதாட்டத்தை காண நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் திரண்டனர். இந்த நிலையில், சில மாடுகள் தடுப்புகளை தாண்டி பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி