ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனிடையே ரஷ்ய வீரர்களுடன் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ரஷ்ய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய 126 பேரில், 96 பேர் நாடு திரும்பியுள்ளனர். இன்னும் 18 பேர் ரஷ்ய ராணுவத்தில் உள்ளனர். அதில் 16 பேரின் நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை எனவும் கூறியுள்ளது.