கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் காதலை முறித்துக்கொள்ள விரும்பாத காதலனுக்கு கூல்ட்ரிங்சில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022-ல் சாரோன்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட அந்த வழக்கில் அவரது காதலி கிரிஷ்மா, கிரிஷ்மாவின் தாய் மற்றும் அவரது மாமா ஆகியோர் குற்றவாளி என கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.