நெல்லை பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மற்றும் அக்னி சிறகுகள் என்ற அமைப்பு இணைந்து பெண்களின் மாதவிடாய் நிகழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகளை கொண்டு மாதவிடாய் சின்னம் வடிவமைக்கும் உலக சாதனை முயற்சி நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுமார் 5000 மாணவிகள் பங்கேற்றனர்.