சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100 சதவீதம் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எந்த ஒரு தடையும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் காற்றுடன் நீடிக்கும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாலை ஃபெஞ்சல் புயலானது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.