ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கனமழை பெய்வதால் ஓடுபாதை முழுவதிலும் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திரையரங்குகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் நீடிக்கும் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை இந்த புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.