கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 4 மணி நேரத்தில் மட்டும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3,200 கனஅடி அதிகரித்துள்ளது. காலை 449 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது அது 3,745 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 2,313 மில்லியன் கன அடியாக நீர்இருப்பு உள்ளது. தொடர்ந்து, கனமழை பெய்து வந்தால், இன்னும் நீர் வரத்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது.