கனமழையால் சென்னை குரோம்பேட்டை நெஞ்சக மருத்துவமனை மற்றும் அரசு பொது மருத்துவமனையில் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். தரை தளத்தில் இருந்த நோயாளிகள் அனைவரும் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டனர். முழங்கால் அளவுக்கு மழை நீர் உள்ளே புகுந்துள்ளதால் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் வெள்ளம் உள்ளே புகுந்துவிடாமல் இருக்க மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பு வைத்துள்ளனர்.