சென்னையில் வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்ந்ததால், உணவகங்களில் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயண்பாட்டிகான 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை ரூ.16 ரூபாய் அதிகரித்து, ரூ.1,980.50-க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் ரூ.1,964.50ஆக இருந்த நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது. ஜுலை மாதம் முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.