சூப்பர் ரஜினிகாந்த் நடித்து வெளியான லால் சலாம் திரைப்படத்தின் எடிட்டர் பிரவீன் குமார் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரவீன் குமார் கே.கே. நகரில் மளிகைப் பொருள் வாங்க சென்ற போது மின்சாரம் தாக்கியுள்ளது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் இன்று மட்டும் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.