சிறுநீர் கழிக்க சென்றவர் பாம்பு கடித்ததில் உயிரிழப்பு

77பார்த்தது
சிறுநீர் கழிக்க சென்றவர் பாம்பு கடித்ததில் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் பென்னகர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (50). இவர் கடந்த ஞாயிறு (நவ. 24) தனது மகள் ஜான்சி வீட்டிற்கு வந்தார். பின்னர் சிறுநீர் கழிக்க விவசாய நிலம் இருக்கும் பகுதிக்கு சென்ற போது கண்ணனை விஷப்பாம்பு கடித்தது. வலியால் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ. 29) கண்ணன் உயிரிழந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி