பழனி முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பனி காலம் என்பதால் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி வழங்கப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே சுக்கு காபி வழங்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.