வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க மேலும் 4 மணி நேரம் ஆகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகே வட தமிழகப் பகுதியில் மூன்றரை மணி நேரமாகக் கரையை கடந்து வரும் நிலையில், முழுவதுமாக கரையை கடக்க நள்ளிரவு 2 மணி முதல் 3 மணி ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் முழுவதுமாக கரையை கடந்து முடிக்கும் வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.