குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு NPS வாத்சல்யா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் உங்கள் குழந்தைக்காக பிறந்தது முதல் மாதம் 1,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 18 ஆண்டுகளில் ஆண்டு வருமானம் சுமார் 12.86% (என்.பி.எஸ். திட்டத்தில் சராசரி வட்டி விகிதம்) இருக்கும். மொத்த முதலீட்டுத் தொகை, ரூ. 2,16,000. இதற்கான வட்டி ரூ. 6,32,718. எனவே குழந்தையின் 18 வயதில் கிடைக்கக்கூடிய மொத்தத் தொகை சுமார் 8,48,000 ரூபாய் ஆகும்.