திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் இன்று ரயில்வே அமைச்சரிடம் மனு அளித்தார். அதிலும் குறிப்பாக திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு ரயில் சேவைகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.