தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அருண்விஜய், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், தற்போது இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக தனுஷ் தன் தோற்றத்தை மாற்றியிருக்கிறார். மீசை தாடியை எடுத்துவிட்டு தனுஷ் மிகவும் இளமையான தோற்றத்தில் நடித்து வருகிறார். அந்த தோற்றத்தில் உள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.