குளிர் காலத்தில் பலருக்கும் சருமம் வறண்டு காணப்படும். சிலருக்கு தோல்களில் வெடிப்பு கூட ஏற்படலாம். அதற்கு தீர்வாக சுத்தமான தேங்காய் எண்ணெயை வாங்கி இரவு படுப்பதற்கு முன்னர் கை, கால்கள், முகத்தில் மசாஜ் செய்து விட்டு படுக்கவும். மறுநாள் காலை இளம்சூடான நீரில் கழுவ வேண்டும். அதிக சூடு/அதிக குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் மேலும் வறட்சி அடையும். உதடு வெடிப்பு, கால்களில் பாத வெடிப்பு போன்றவற்றிற்கும் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.