போதைப்பொருள் கடத்தல், கொலை என வட மாநிலங்களை கதிகலங்கச் செய்து வரும் தோடா கும்பலை மத்தியப்பிரதேச போலீஸார் சேஸிங் செய்து பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில், சுங்கச்சாவடி வழியாக காரில் தப்பிச் சென்ற அக்கும்பலை சினிமா பாணியில் போலீஸார் சேஸிங் செய்தனர். பின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவர்களை கைது செய்தனர். பிடிபட்ட கும்பலிடம் இருந்து 911 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.