தூதுவளை இலைகளை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும் அதனுடன் மிளகு, சீரகம், பூண்டு, 2 வர மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள இந்த கலவையை கொட்டி நன்கு வதக்கவும். அதனுடன் அரைத்த தக்காளி மற்றும் புளி கலவையை ஊற்றி உப்பு சேர்த்து, கொத்தமல்லி தலை தூவி நுரைகட்டி வந்ததும் இறக்கினால் சளியை அடியோடு போக்கும் தூதுவளை ரசம் ரெடி.