திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்பாலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையின் வெள்ளத்தால் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று (அக்.29) நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வினை தொடர்ந்து இன்று (அக்.30) பொதுமக்கள் அச்சமின்றி பயணம் மேற்கொள்ள ஆற்றுப்பாலத்தின் ஓரங்களில் தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டுள்ளது.