உள்நாட்டு நடத்தையில் (Gross Domestic Behaviour – GDB) தமிழ்நாடு 2-ம் இடம் பிடித்துள்ளது. சமூக நடத்தை, பாதுகாப்பு, பாலின அணுகுமுறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு முதல்முறையாக இந்த ஆய்வை ‘ஹௌ இந்தியா லிவ்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘இந்தியா டுடே’ நடத்தியது. 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்திலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முதல் 3 இடங்களில் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் இடம்பிடித்துள்ளது. கடைசி 3 மூன்று இடங்களை குஜராத், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் பிடித்துள்ளது.